• Jan 19 2025

நிஜத்தில் கூட வில்லனாக மிரட்டும் ஜெயிலர் விநாயகன்? ஏர்போர்ட்டில் அதிரடியாக கைது!

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

1995 ஆம் ஆண்டு முதல் கேரள சினிமாவில் நடிகராக திகழ்பவர் தான் விநாயகன். தமிழ் மொழியை பொருத்தவரை 2006 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான திமிரு படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். அதன் பின்பு சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல், காலை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சுமார் 10 வருடங்கள் கழித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து அசத்தியிருந்தார். இவருக்கு ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக காணப்பட்டது. நடிப்பை பொறுத்தவரை தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை கணக்கச்சிதமாக நடித்து முடிக்கும் விநாயகன்  சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகின்றார்.

ஏற்கனவே கேரளாவில் நடந்த சம்பவம் ஒன்றில் அவரை கைது செய்ய வந்த போலீஸை அவர் மிரட்டியதாக சில குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றது..


இந்த நிலையில், விமான நிலைய போலீசார் அவரை கைது செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது கொச்சியில் படப்பிடிப்பில் இருந்த விநாயகன்  அங்கிருந்து கோவாவுக்கு சென்றுள்ளார். இதன் போது தன்னுடைய கனெக்டிங் பிளேட்டுக்காக ஹைதராபாத்தில் உள்ள விமான நிலையத்தில் அவர் இறங்கி உள்ளார். அப்போது கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

அதாவது, விமான நிலைய ஊழியர்கள் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டு தன்னை தனியறையில் வைத்து விசாரணை நடத்தி வருவதாக விநாயகர் கூற, நடிகர் விநாயகன் தான் விமான நிலையத்தில் பாதுகாப்பாக இருந்த CISF போலீஸ் அதிகாரிகளை தாக்கியதாகவும், அவர் மது அருந்தி இருந்தது கண்டுபிடிக்கப் பட்டதாகவும் போலீசார் தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

Advertisement

Advertisement