• Sep 19 2025

வெங்கட் பிரபுவின் வேட்டை... கோட் 3 நாள் வசூல்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று தளபதி விஜய்யின் GOAT. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் முதல் முறையாக நடித்த இப்படம் கடந்த 5ஆம் தேதி வெளிவந்தது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். தியேட்டர்களில் அனல் பறக்கிறது.  


கிட்டதட்ட ரூ. 400 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரிலீஸுக்கு முன்பே பல கோடி லாபம் கொடுத்து விட்டது என தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேட்டிகளில் கூறியிருந்தார். சமூக வலைத்தளத்தில் GOAT திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்தாலும், மக்கள் இப்படத்தை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் GOAT படத்தின் 3 நாட்கள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் 3 நாட்களில் உலகளவில் ரூ. 215 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளது.

Advertisement

Advertisement