கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிய பிரதீப் ரங்கநாதன் "லவ் டுடே " படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகினார். சமீபத்தில் வெளியாகிய "டிராகன் " திரைப்படத்தில் சிறந்த கருத்தை இளம் சமுதாயத்திற்கு எடுத்து கூறி மக்கள் மத்தியில் மேலும் இடம்பிடித்தார். இந்த படம் நடிக்கும் போதே விக்கினேஷ் சிவன் இயக்கத்தில் lik எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. "டிராகன்" படத்தினை தொடர்ந்து இவர் அடுத்து ஒரு படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.சமீபத்தில் இப் படத்தின் அறிவிப்பு ஒன்று விடுவிக்கப்பட்டது. இப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்தினை ஒயம்மார் ஆஸ்பத்திரியில் எடுத்து வருகின்றார் இயக்குநர் கீர்த்திஸ்வரன் படப்பிடிப்புகளின் போது இடையில் பிரதீப்பிற்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Listen News!