• May 02 2026

பாக்ஸ் ஆபீஸை அதிரவைத்த ‘வாழ 2’.. ஜியோ ஹாட்ஸ்டாரில் தரை இறங்கும் தேதி இதுதான்!

shali / 57 minutes ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் 2024ஆம் ஆண்டு வெளியாகி கவனம் பெற்ற ‘வாழ’ திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாகியும் பெரிய வெற்றியை பெற்றது. ஆனந்த் மேனன் இயக்கிய இந்த படம், தனது தனித்துவமான கதைக்களம் மற்றும் இயல்பான நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தது.


அதனைத் தொடர்ந்து, வாழ 2 திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி வெளியானது. விபின் தாஸ் எழுத்தில் சவின் எஸ்.ஏ இயக்கிய இந்த படம், பள்ளிக்கால நண்பர்கள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நகைச்சுவையும், நெகிழ்ச்சியும் கலந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, ரூ.110 கோடி வரை வசூல் செய்து இந்த ஆண்டின் முக்கிய ஹிட் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இந்த வெற்றியை தொடர்ந்து, இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்து வெளியிட தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும், ‘வாழ’ தொடரின் மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. முதல் இரண்டு பாகங்கள் ஆண்களை மையப்படுத்தி இருந்த நிலையில், மூன்றாம் பாகம் பெண்களை முன்னிலைப்படுத்தி உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘வாழ 2’ திரைப்படம் விரைவில் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் மே 15ஆம் தேதி வெளியாகும் என தகவல்கள் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement