• May 05 2024

அந்த இடத்தில் தடவினார்... விசித்ராவை ஹோட்டல் ரூமுக்கு வர சொன்ன நடிகர் இவர் தானா... இதோ அந்த வைரல் வீடியோ...

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று போட்டியாளர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட மோசமான சம்பவம் குறித்து மனம் திறந்து பேசினார்கள். இதில் நடிகை விசித்ரா தனக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து மனம் உறுகி பேசினார். யார் அந்த ஹீரோ என்ற தகவல் வெளியாகியுள்ளது.


படப்பிடிப்பின் போது, அப்படத்தின் ஹீரோ என்னை அவருடைய ரூமுக்கு வரச்சொல்லி தவறான முறையில் அழைத்தார். நான் போகவில்லை. அதன்பின் என்னை பலரும் டார்கெட் செய்து தவறான முறையில் நடக்க முயன்றனர். படப்பிடிப்பில் என்னை ஒருவர் தவறான முறையில் தடவினார். தெரியாமல் செய்திருப்பார் என முதல் முறை விட்டுவிட்டேன். அதன்பின் மீண்டும் மீண்டும் அதே போல் நடந்தது. நான் என்னை தொட வந்த கையை இறுதியில் பிடித்துவிட்டேன்.


உடனடியாக அவரை அழைத்து கொண்டு படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரிடம் சென்று, எனக்கு நடந்த கொடுமையை கூறினேன். ஆனால், அவர் என் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதைப்பற்றி புகார் கொடுத்ததும் யாரும் எனக்கு உதவவில்லை. சங்க தலைவரும் இதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை என கண்கலங்கி’ பேசினார் விசித்ரா.


இந்நிலையில், நடிகை விசித்ராவை ரூமுக்கு வா என அழைத்து, இப்படியொரு கொடுமை நடக்க காரணமாக இருந்த அந்த நடிகர் பாலகிருஷ்ணா என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அது தொடர்பான வீடியோ ஒன்றையும் பதிவிட்டு உள்ளார்கள். 


கதையில் விசித்ரா கூறிய விஷயங்களும், பாலகிருஷ்ணாவின் இப்படத்தின் காட்சிகளும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டு வருகிறார்கள். நடிகை விசித்ரா இந்த சம்பவத்தை கூறும்போது தன்னை தவறாக அழைத்து டாப் நடிகர் என்று விசித்ரா குறிப்பிட்டு இருந்தார். இதனால் அனைத்து விஷயங்களும் பாலகிருஷ்ணாவுடன் ஒத்துப்போவதாக கூறி ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள். 

Advertisement

Advertisement

Advertisement