• Apr 15 2026

இது என்னோட US Brother.. எல்லாரும் ஹாய் சொல்லுங்க.! விசித்ரா வெளியிட்ட லவ்வபிள் வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

90' கிட்ஸுக்களுக்கு கண்டிப்பாக விசித்ரா யார் என்பது கட்டாயம் தெரிந்து இருக்கும். 90-களில் வந்த பல்வேறு ஹிட் திரைப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் இவர் நடித்து இருக்கிறார். 

எனினும் குறிப்பாக, வடிவேலு, கவுண்டமணி, செந்தில் ஆகியோருக்கு கோவை சரளாவுக்கு பின்பு விசித்ரா தான் சரியான ஜோடி. 


இவர் கிட்டத்தட்ட 18 வருடங்களுக்குப் பின்னர் கடந்த 2019 ஆம் ஆண்டு சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து இருந்தார். சன் டிவியில் ஒளிப்பரப்பான ராசாத்தி என்ற சீரியலில் வில்லி ரோலில் விசித்ரா நடித்திருந்தார்.


குறித்த சீரியலுக்கும் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஆனால் பாதியிலே அந்த சீரியல் முடிக்கப்பட்டது. 

இதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றி கிட்டத்தட்ட 95 நாட்கள் வரையில் சிறப்பாக விளையாடி வந்தார் விசித்ரா. அதற்கு அவரது குடும்பமும் ரொம்ப சப்போர்ட்டாக இருந்தது.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய விசித்ரா, தற்போது தனது குடும்பத்துடன் சந்தோசமாக நேரத்தை செலவிட்டு வருவதாக கூறியுள்ளார்.

இந்த நிலையில், us இல் இருந்து வந்த தனது சகோதரர்களை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார் நடிகை விசித்ரா. தற்போது குறித்த காணொளி வைரலாகி உள்ளதோடு, ரசிகர்கள் அவர்களுக்கும் நல்ல வரவேற்பை கொடுத்து வருகின்றார்கள்.


Advertisement

Advertisement