தென்னிந்திய சினிமாவின் பிரபல இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ராணா ரடபதி, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் தான் பாகுபலி. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் பாகுபலி உரிமைக்கான பத்தாவது ஆண்டு நிறைவை குறிக்கும் விதத்தில் ஒட்டுமொத்த கதையையும் ஒரே தரத்தில் ரசிக்கும் படி புதிய 'தி எபிக்' பதிப்பை அறிவித்தார் ராஜமௌலி.
இந்த பதிப்பு எதிர்வரும் அக்டோபர் 31ஆம் தேதி அன்று IMAX வடிவத்தில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பாகுபலியின் இரண்டு பாகங்களும் மாபெரும் அளவில் வெற்றி பெற்ற நிலையில் 'பாகுபலி: தி எபிக்' மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாக்கியுள்ளது.

இந்த நிலையில், பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலியின் பிறந்த நாளை முன்னிட்டு பாகுபலி படக் குழுவினர் ஒரு BTS வீடியோவை பகிர்ந்துள்ளனர்.
அதில் பாகுபலி படப்பிடிப்பு தளத்தின் போது படத்தில் நடித்த நடிகர்களுக்கு ராஜமௌலி நடித்து காண்பிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அவருடைய நடிப்பை தான் நடிகர்கள் தத்ரூபமாக உள்வாங்கி நடித்ததை நாம் திரையில் பார்த்து வியந்துள்ளோம்.. இதோ அந்த வீடியோ..,
This clip is a proof why Directors are the real character of movies and deserve all the credits of it...... 🫡pic.twitter.com/JqzwJm2yWr
Listen News!