• Apr 20 2026

ஹீரோயின் ஆனதும் கலக்குறாங்களே.! ஜோவிகாவின் லேட்டஸ்ட் வைரல் கிளிக்ஸ்

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தியான ஜோவிகா விஜயகுமார், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு இயக்குநர் அவதாரம்  எடுத்தார். அவர் தனது இயக்கத்தில் "மிஸஸ் மிஸ்டர்" படத்தை இயக்கி வெளியிட்டார். 

அதில் வனிதா கதாநாயகியாகவும் ராபர்ட் மாஸ்டர் கதாநாயகனாகவும் நடித்த இந்தப் படம், 40 வயதை கடந்த பெண்ணுக்கு குழந்தை வேண்டும் என்ற கதையை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டதால் பல விமர்சனங்களுக்கு உள்ளானது. 

இரண்டு நாட்கள் கூட திரையரங்கில் தாக்குப் பிடிக்காமல் போனது மட்டுமின்றி, இளையராஜா பாடல்களுக்கான பதிப்புரிமை தொடர்பாக சர்ச்சையும் எழுந்தது. இதையடுத்து வனிதா படத்தை தனது யூட்யூப் சேனலில் நேரடியாக வெளியிட்டார்.


ஜோவிகா இயக்குநர் பணியை தாண்டி நடிகையாகவும் களம் இறங்கியுள்ளார். தெலுங்கில் இயக்குநர் எம்எஸ் ராஜீவுடன் இணைந்து நேரடியாக நடிகையாக பணியாற்றுகிறார் என்ற செய்தி வெளியானதும் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்தனர். 

இந்நிலையில், நடிகை ஜோவிகா ஆரஞ்சு நிற சேலையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். "இது புதிய தொடக்கம்" என்ற தலைப்பில் வெளியிட்ட இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.  

Advertisement

Advertisement