• Jan 19 2025

இவங்க ரெண்டு பேரும் மட்டும் தான் சூப்பரா கேம் ஆடுறாங்க.. கொளுத்திப் போட்ட தர்ஷா குப்தா

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதங்களை கடக்க உள்ள நிலையில், தற்போது தான் இந்த நிகழ்ச்சி சூடு பிடித்துள்ளது. 18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சீசனில் இதுவரையில் நான்கு பேர் எலிமினேட் ஆகிய வெளியே  சென்றுள்ளார்கள்.

இந்த சீசனின் ஆரம்பத்தில் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், அன்ஷிதா, விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றார்கள்.

இதை தொடர்ந்து வாராவாரம் ஒருவர் வெளியேற வேண்டும் என்ற கட்டாயத்தின் அடிப்படையில் ரவீந்தர்,அர்ணவ், தர்ஷா குப்தா மற்றும் இறுதியாக அன்ஷிதா ஆகியோர் வெளியேறியிருந்தனர்.

d_i_a

இதை அடுத்து பிக் பாஸ் வீட்டில் மேலும் ஐந்து பேர் வைல்ட் கார்ட்  என்ட்ரியாக உள் நுழைந்தார்கள். அதன்படி ராணவ், வர்ஷினி வெங்கட், மஞ்சரி, சிவாஜி தேவ், ராயன் மற்றும் ரீடா தியாகராஜன் என்பவரும் வைல்டு கார்டு என்ட்ரியில் வந்துள்ளனர். 


இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 8ல் கலந்து கொண்டு மூன்றாவது வாரம் எலிமினேட் ஆகி வெளியே சென்ற தர்ஷா குப்தா ரசிகை ஒருவர் கேட்ட கேள்விக்கு போட்ட கமெண்ட் தற்போது வைரலாகி வருகின்றது.


அதாவது பிக்பாஸ் வீட்டில் தற்போதுள்ள போட்டியாளர்களுள் ஆண்கள் மற்றும் பெண்கள் அணியில் யார் யார் சிறப்பாக விளையாடுவது என கேள்வி கேட்க, அதற்கு ஆண்கள் அணியில் முத்துக்குமரனும், பெண்கள் அணியில் ஜாக்குலினும் சிறப்பாக விளையாடுவதாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார் தர்ஷா குப்தா.

Advertisement

Advertisement