தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் அன்பை பெற்ற ஜீவா, தற்பொழுது நேர்காணல் ஒன்றில் தனது திரையுலக அனுபவம் குறித்து உணர்ச்சிபூர்வமாக கதைத்துள்ளார். குறிப்பாக, 2007ஆம் ஆண்டு வெளியான ‘கற்றது தமிழ்’ படத்திற்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
‘கற்றது தமிழ்’ திரைப்படம் வெளியாகி தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான சமூக கருத்தை முன்வைத்த படம் என்ற பெருமையை பெற்றது. இயக்குநர் ராம் இயக்கத்தில் ஜீவா இப்படத்தில் நடித்த விதம் அனைவரின் பாராட்டை பெற்றது. ஆனால், இதற்கு தேசிய விருது கிடைக்காதது மிகவும் வருத்தமாக உள்ளது என்றார்.
மேலும் ஜீவா, "நாங்கள் அந்த படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், படம் வெளியான பிறகு தயாரிப்பாளர் இறந்து விட்டார். அதனால் அந்த விருதுக்கு விண்ணப்பிக்க முடியாமல் போய்விட்டது" என்றார். இவ்வாறு ஜீவா தனது மனம்திறந்து பேசியது அனைவரையும் வியக்கவைத்தது. இந்த அனுபவத்திற்குப் பிறகு தனக்கு விருதுகளின் மீது எந்த விருப்பமும் இல்லாமல் போய்விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் "கற்றது தமிழ்’ படம் கிடைத்தபோது, என் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக இருந்தது. அந்தப் படம் எனக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கும் முக்கியமான படமாக அமைந்திருந்தது. ஆனால், தேசிய விருது கிடைக்காதது ரொம்பவே கஷ்டமாக போய்விட்டது என்றார். மேலும் அவர் கூறும்போது, தான் அதற்குப் பிறகு எந்தப் படத்திலும் விருதுகளுக்காக நடிக்கவில்லை என்றதுடன் மக்கள் கொடுக்கும் பாராட்டுக்களையே உண்மையான விருது என்று நினைக்கிறேன்" என்றார்.
ஜீவா கூறிய இந்த உருக்கமான தகவல் ரசிகர்களிடையே உணர்ச்சி மிகுந்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பலரும் "அந்தக் காலத்திலேயே ‘கற்றது தமிழ்’ ஒரு மாஸ்டர் பீஸ் படம். ஆனால் சினிமா உலகில் உண்மையான திறமையை எல்லா நேரத்திலும் மதிக்கவில்லை" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Listen News!