• Jan 18 2025

அந்த காட்சிகளில் நடித்த அனுபவம் இருக்கு... நடிகை என்பதை நிரூபிக்க இதை விட வேற வழி இருக்கு... நடிகை கஜோல் பேட்டி

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ஹிந்தி சினிமாவில் 90களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் நடிகை கஜோல். அந்த மாதிரி காட்சியில் நடிக்க விரும்பம் இல்லை என சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த விடையம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தற்போது 49 வயதாகும் கஜோல் தனது ரோலுக்கு முக்கியத்துவம் இருக்கும் ரோல்களாக தேர்ந்தெடுத்து படங்கள் மற்றும் வெப் சீரிஸ் ஆகியவற்றில் நடித்து வருகிறார். சமீபத்தில் கஜோல் அளித்திருக்கும் ஒரு பேட்டியில் தான் படங்களில் உடல் ரீதியாக molest செய்யப்படும் காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் என கூறி இருக்கிறார்.


அதாவது "அது போல ஒருவர் நம்மை தொடும்போது, நடிகை என்ற விஷயம் ஒரு அளவு வரை தான். எனக்கு மிகவும் uncomfortable ஆக இருக்கும். Physical abuse அல்லது molestatation காட்சிகளில் நடிப்பது மிகவும் மோசமாக அருவருப்பாக தோன்றும். 


இப்படிப்பட்ட காட்சிகளில் நானும் நடித்து இருக்கிறேன். ஆனால் அது ரொம்ப மோசமான அனுபவத்தை தான் கொடுத்தது." ஒரு நல்ல நடிகர் என இதில் எல்லாம் நடித்து நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. வேறு 100 வழிகளில் அதை நிரூபிக்கலாம். அந்த அனுபவம் எனக்கு மீண்டும் தேவையில்லை" என கஜோல் கூறி இருக்கிறார்.

Advertisement

Advertisement