• Jan 19 2025

நீ நேர்ல வந்து பார்த்தியா? பிரபலங்கள் முன்னிலையில் பயில்வானை பந்தாடிய கீர்த்தி..!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை கீர்த்தி பாண்டியன், தேவன், இணைந்த கைகள், ஊமைவிழிகள் படங்களில் நடித்த முன்னாள் MLA நடிகர், தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகளாவார். இவர் இரண்டு படங்களில் தான் நடித்து இருந்தாலும், இணையத்தில் போட்டோ சூட் புகைப்படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்.

இதை தொடர்ந்து, தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராகத் திகழும் அசோக் செல்வனை,  காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார் கீர்த்தி பாண்டியன். 


இந்த நிலையில், பிரபலங்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றி விமர்ச்சிக்கும் பயில்வான் ரங்கநாதனை, பிரஸ் மீட் ஒன்றில் வைத்து நடிகை கீர்த்தி பாண்டியன் விளாசி எடுத்துள்ளார்.

அதன்படி, அண்மையில் தான் தான் காதலித்த நடிகர் அசோக் செல்வனை திருமணம் செய்தார் கீர்த்தி. 


கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியாகவுள்ள கண்ணகி படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் வைத்து, வீட்டில் தான் இருவரும் சண்டை போடுறீங்கனா பட ரிலீஸிலும் ஏன் இப்படி சண்டை போடுறீங்க என கேட்டுள்ளார்.

இதையடுத்து, கொந்தளித்த கீர்த்தி பாண்டியன், 'என் வீட்டுக்கு வந்து நீ பார்த்தியா? நாங்க எப்போதும் சண்டை போடுகிறோம் என்பதை என கேள்வி எழுப்பி பயில்வானை பந்தாடி உள்ளார்.


Advertisement

Advertisement