பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே, கல்கி 2898 ஏ.டி. படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து திடீரென நீக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. முதல் பாகத்தில் அவர் நடித்த கேரக்டர் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. குறிப்பாக, கருவில் வளர்கின்ற குழந்தை எதிர்காலத்தில் என்னவாகும் என்ற கேள்விக்கு பதில் தரும் இரண்டாம் பாகத்துக்காக ரசிகர்கள் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.
தற்போது வெளியாகிய தகவலின்படி, தீபிகா தற்போது ஒரு தாயாகிவிட்ட நிலையில், பல புதிய நிபந்தனைகளை தயாரிப்பு நிறுவனத்திற்கு முன்வைத்ததாக கூறப்படுகிறது. அந்த நிபந்தனைகளில் சில:
ஒரே நாளில் 7 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பேன்.தனக்குடன் வரும் 25 உதவியாளர்களுக்கான அனைத்து செலவுகளும் (தங்குமிடம், உணவு உள்ளிட்டவை) தயாரிப்பு நிறுவனம் தர வேண்டும். முதல் பாகத்தில் பெற்ற சம்பளத்திலிருந்து 25% கூடுதலாக சம்பளம் வேண்டும்.
இந்த நிபந்தனைகள் தயாரிப்பு தரப்புக்கு பெரும் சுமையாக மாறியதையடுத்து, இறுதியாக இரு தரப்பினரும் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இதன் விளைவாக, தீபிகா படுகோனே கல்கி படத்தின் இரண்டாம் பாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக உறுதியாகியுள்ளது.
இதுபற்றி நடிகர் அமீர்கான் ஒரு பேட்டியில் பேசியதுபோல, “நான் பணிபுரியும் படங்களில் என் மேக்கப்போனும், காஸ்ட்யூம் டிசைனர் ஆகியோருக்கே தயாரிப்பாளர்கள் சம்பளம் வழங்கினால் போதும். மற்ற உதவியாளர்களுக்கான முழு செலவையும் தயாரிப்பாளர் ஏற்க வேண்டிய கட்டாயமில்லை. ஒரு கட்டத்திற்கு பிறகு சில முன்னணி நடிகர்கள் இந்த விஷயத்தில் அளவை மீறுகிறார்கள்” எனத் தெரிவித்தார். அவரது இந்த நேர்மையான கருத்து ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளது.
தீபிகாவை சுற்றியே ஆரம்பத்தில் எழுதப்பட்ட கதையை, இப்போது படக்குழு மாற்றி அமைக்க திட்டமிட்டுள்ளது. இது கதையின் போக்கிலும், கதாபாத்திர அமைப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழ்நிலையில் தயாரிப்பு நிறுவனம் எடுத்த இந்த தைரியமான முடிவு தமிழ் சினிமாவிலும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். ஹைப்புக்கும், பிரபலத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து தயாரிப்பாளர்கள் எதையும் தாண்டி சில நடிகைகளின் கோரிக்கைகளை ஏற்கும் நிலை இனி நீங்க வேண்டும் என்பதே பலரின் கருத்து.
Listen News!