• Jan 15 2025

கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு தினம்! சோகத்துடன் திரண்ட பிரபலங்கள்!

subiththira / 2 weeks ago

Advertisement

Listen News!

கேப்டன் விஜயகாந்த் கடந்த ஆண்டு உடல்நல குறைவால் காலமானார். இந்நிலையில் அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவு நாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்துள்ளனர். இந்நிலையில் அரசியல்வாதிகள், பிரபலங்களும் கலந்து கொண்டனர். இது குறித்து பார்ப்போம். 


கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் காலையில் இருந்தே மக்கள் அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். இதேபோல் அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரை உலக பிரபலங்களும் விஜயகாந்த் நினைவிடத்தில் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தேமுதிக சார்பில் அமைதி பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அரசு மறுத்ததால் குறைந்த அளவு தூரமே பேரணியாக நடந்து வந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். 


இந்நிலையில் இந்த நிகழ்வுக்கு கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, எல்கே சுதீஷ், விஜய்காந்தின் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் கட்சி நிர்வாகிகள், சீமான், தொண்டர்கள், விஜயகாந்தின் ரசிகர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்று தவெக கட்சி  தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுத்ததை அடுத்து அவரும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement