தமிழ் சினிமாவில் குடும்பத்தை மையப்படுத்திய திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்களின் மனதைக் கவரும். அந்தவகையில், சமீப காலமாக பேசப்பட்டு வந்த ‘கொம்புசீவி’ திரைப்படம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று தற்போது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், வரவிருக்கும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு டிசம்பர் 25, 2025 அன்று பிரமாண்டமாக வெளியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான தகவல் வெளியான சில மணிநேரங்களுக்குள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

குடும்பம் முழுவதும் ரசிக்கக்கூடிய திரைப்படங்களை வழங்கிய இயக்குநர் பொன்ராம், இந்த முறை வித்தியாசமான கிராமத்து பின்னணியுடன் ‘கொம்புசீவி’யை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கிராமிய பின்னணி, நகைச்சுவை, உணர்ச்சி, குடும்பத்தைச் சுற்றிய கதைக்களம் என்பன எல்லாம் இணைந்து ரசிகர்களை மகிழ்விக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் சரத்குமார் மற்றும் சண்முக பாண்டியன் நடித்துள்ளார்கள். சரத்குமார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக நீண்ட காலமாக பல தளங்களில் தனது திறமையை நிரூபித்தவர். அண்மைக் காலங்களில் அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!