• May 20 2024

மலையாளத்தில் சக்கைப்போடு போட்ட பிரேமலு படத்தின் தமிழ் டிரைலர் சற்றுமுன் ரிலீஸ்!

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

மலையாளத்தில் நஸ்லன், மமிதா பைஜு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் பிரேமலு.  இந்த படத்தை தண்ணீர்மதன் தினங்கள், சூப்பர் சரண்யா படங்களை இயக்கிய கிரிஷ் ஏரி இயக்கியுள்ளார்.

பிரேமலு திரைப்படம் நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக கடந்த ஒன்பதாம் திகதி திரையரங்குகளில் வெளியானது. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களுக்கு நெருக்கமான கதைகளத்தில் உருவான இந்த படம், 100 கோடிக்கும் அதிகமாக வசூலில் வேட்டையாடி உள்ளது.

இந்த படம் தெலுங்கில் வெளியான நிலையில், தமிழிலும் விரைவில் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டது. அதற்கான டப்பிங் பணிகள் முடிந்ததாகவும் தணிக்கை சான்றிதழ் பெற்ற பின் திரைக்கு வரும் எனவும் கூறப்பட்டது.


இந்த நிலையில், தற்போது பிரேமலு தமிழ் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம் எதிர்வரும் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாகவும் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் மஞ்சுமேல் பாய்ஸ் படம் போலவே ரசிகர்கள் இந்த படத்தையும் கொண்டாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 100 கோடி ரூபாய் வரை வசூலித்த பிரேமலு திரைப்படம், இன்னும் 150 கோடி வரை நெருங்க வாய்ப்பு இருப்பதாகவும்  கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement