• Jan 19 2025

நடிகர் தனுஷ்க்கு இனிமே அம்மா, அப்பா பிரச்சன இல்லப்பா..! அதிரடி காட்டிய நீதிபதி

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

கடந்த 2015 ஆம் ஆண்டு மேலூர் கோர்ட்டில் மதுரை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி என்ற தம்பதியினர் வழக்கு தாக்கல் ஒன்றை செய்திருந்தனர்.

அதாவது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது வீட்டை விட்டு தனுஷ் ஓடிவிட்டார். தற்போது டைரக்டர் கஸ்தூரிராஜாவின் வளர்ப்பு மகனாக தனுஷ் உள்ளார். அதனால் பெற்றோர் பராமரிப்பிற்காக நடிகர் தனுஷ் எங்களுக்கு மாதாந்த உதவித் தொகையை எங்களுடைய மகன் தனுஷ் தரவேண்டும் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தனர்.

மேலூர் கோர்ட்டில் தொடர்ந்த இந்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு கிளை ரத்து செய்தது. ஆனால் இந்த வழக்கில் தனுஷ் கல்வி மற்றும் பிறப்பு சான்றிதழ்களை போலியாக தாக்கல் செய்துள்ளதாக குற்றவியல் சட்டப்படி நடவடிக்கை அலுவலகம் கதிரேசன் மதுரை ஆறாவது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு செய்திருந்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி ஆனது.


இதை எதிர்த்து  ஐகோர்ட்டு கிளையில் சீராய்வு மனு செய்திருந்தார்  கதிரேசன். அதில் தனுஷ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ் உண்மை தன்மையின் முடிவு நீதிமன்றத்தில் அனுப்பப்படவில்லை இதை கவனிக்காமல் தள்ளுபடி செய்த மாஜிஸ்திரேட்டின் உத்தரவை ரத்து செய்து முறையாக விசாரிக்குமாறு கூறியிருந்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கு உள்நோக்கத்துடன் செய்யப்பட்டுள்ளது என்றும் இதில் எந்த ஆதாரமும் இல்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த வழக்கு "உள்நோக்கத்துடன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது , இதில எவ்வித ஆதாரங்களும் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்ய பட்டுள்ளது "என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement