• Apr 27 2024

சிவாஜி படத்தின் கதையே மாறிப்போச்சா? பட்டிமன்ற பேச்சாளர் ராஜா ஓபன் டாக்...

ammu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ஷங்கர் தமிழ் சினிமாவின் திரை துறைக்கு வந்த ஆரம்பத்திலிருந்து இன்று வரை பிரம்மாண்ட இயக்குநராக திகழ்ந்து கொண்டிருப்பவர். இவரின் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சிவாஜி திரைப்படம் பிரமாண்ட வசூல் அடித்து சாதனை செய்தது.  


அந்த படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரேயா, சுமன், விவேக் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தில் நடிகர் விவேக் காமெடியில் பின்னி பெடலெடுத்து இருப்பார். அதிலும் குறிப்பாக அங்கவை சங்கவை இவர்களை வைத்து வரும் காமெடி காட்சிகள் அப்போது மக்கள் மத்தியில் மிகப் பெரும் பிரபலமானது.


சமீபத்தில் இந்த காட்சி சமூக வலைதளத்தில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அதாவது நிஜத்தில் வெள்ளையாக இருப்பவர்களை காமெடி என்ற பெயரில் கருப்பாக மாற்றி அவர்களை வைத்து காமெடி செய்து இருப்பது அவர்களின் உருவத்தை கேலி செய்வது போல தான் என்றும், ஷங்கர் எப்படி இப்படி ஒரு காட்சியை வைத்தார் என்றும் விமர்சனங்கள் எழுந்தது.


அதுமட்டுமில்லாமல் சாலமன் பாப்பையா போன்ற ஒரு நபர் எப்படி உருவக்கேலி செய்யும் காமெடியில் நடித்தார் என்றும் கேள்வி எழுந்தது. இப்படி ஒரு நிலையில் இது குறித்து பட்டிமன்ற பேச்சாளர் ராஜா கூறுகையில், சிவாஜி படத்தில் சாலமன் பாப்பையாவை நடிக்க அழைத்த போது அவர்கள் கூறிய கதையில் கருப்பு நிறத்தில் இரண்டு பெண் பிள்ளைகள் அவர்களுக்கு மாப்பிள்ளை கிடைக்காமல் அவதிப்படும் தகப்பன்.


அதே போல கருப்பாக இருக்கும் கதாநாயகன், அவருக்கு சிகப்பாக இருக்கும் கதாநாயகி. இப்படி இருக்கையில் படத்தின் முடிவில் கருப்பாக இருக்கும் கதாநாயகனுக்கு சிகப்பாக இருக்கும் மனைவி, அதே போல கருப்பாக இருக்கும் அந்த பெண்களுக்கு சிகப்பாக இருக்கும் மணமகன்கள் கிடைப்பார்கள். இதன் மூலம் நிறம் என்பது மோசமானது அல்ல என்ற கருத்தை உள்ளடக்கிய கதை என சொல்லித்தான் சாலமன் பாப்பையாவை நடிப்பதற்கு அழைத்தார்கள்.


ஆனால் படமோ 3 மணி நேரம். எனவே இவர்களுக்கான அந்த கதையை விட்டு விட்டு படம் வேறு வழியில் சென்று விட்டது. படம் வெளியான பிறகு பலரும் மிகவும் கேவலமாக திட்டினார்கள். சாலமன் பாப்பையா தொடர்ந்து 13 வருடங்கள் திருக்குறள், சங்க இலக்கியம் என பலவற்றை மேடையில் பேசி இருக்கிறார். பாராட்ட மனமில்லாத நம் மக்கள் டிவியில் அங்கவை, சங்கவை என்று வந்தவுடன் தி ட்டுகின்றனர். 


கதை தொடங்கிய போது முதலில் சொன்னது போன்று தான் இருந்தது. அதனால் தான் அவர் நடித்தார். ஆனால் கதை மா றியதால் நாங்கள் என்ன செய்ய முடியும். நீங்கள் என்னிடம் பேட்டி எடுக்கும் போது ஒரு கேள்வி கேட்டால் நான் பாதியில் எழுந்து செல்ல மு டியாது என்று கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement