• Mar 23 2023

அழகில் ரீல் அம்மாவையே மிஞ்சிய குட்டி நயன்.. லேட்டஸ் கிளிக்ஸ்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஒருவரே நடிகை அனிகா. அதனைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வந்தார்.


அதிலும் குறிப்பாக 2019இல் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் கொடுத்த விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக்காட்டினார். 


அதுமட்டுமல்லாது மலையாளத்தில் வெளிவந்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்திலும் அனிகாவிற்கு அம்மாவாக நயன்தாரா தான் நடித்திருப்பார்.

அத்தோடு என்னை அறிந்தால் படத்திலும் நடிகர் அஜித்குமார், திரிஷாவின் மகளாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர். இதனைத் தொடர்ந்து தற்போது ஒரு சில படங்களில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.


இவர் நயன்தாராவிற்கு மகளாக நடித்திருந்தாலும் தற்போது அழகில் நயன்தாராவையே மிஞ்சும் அளவிற்கு ஜொலித்து வருகின்றார். அந்தவகையில் தற்போதும் இவர் வெள்ளை நிற உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement