• Apr 20 2024

நடைபெற்று முடிந்த 'ஏகே 62' படத்தின் பூஜை.. தேர்வு செய்யப்பட்டுள்ள டைட்டில்.!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

அஜித்தின் 61ஆவது படமான 'துணிவு' படத்தினைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் தற்போது எதிர்பார்த்துக் காத்திருப்பது அவரின் 62ஆவது படத்தினை எதிர்பார்த்துத் தான். அந்தவகையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கவிருக்கும் 'ஏகே 62' திரைப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது.


ஆனால் அந்த வாய்ப்புக் கை நழுவிப் போய் தற்போது இந்த வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கிடைத்துள்ளது. மேலும் லைக்கா தயாரிக்கும் இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று தல ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.


இந்நிலையில் இப்படத்தின் உடைய பூஜை நேற்று நடந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால், கதாநாயகன் அஜித் இந்தப் பூஜையில் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகின்றது. அத்தோடு இப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் கமிட்டாகி உள்ளதோடு நிரவ் ஷா தான் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது


அதுமட்டுமல்லாது ஏகே 62 படத்திற்கு மொத்தம் மூன்று டைட்டில்களை படக்குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனராம். இதில் ஏதாவது ஒரு டைட்டில் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் முடிவு செய்யப்பட்டு, மார்ச் இரண்டாவது வாரத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரியவந்துள்ளது. எனவே இந்த அறிவிப்பிற்காக அஜித் ரசிகர்கள் அனைவரும் மார்ச் இரண்டாவது வாரம் வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனக் கூறப்படுகின்றது.  

Advertisement

Advertisement

Advertisement