• Jan 19 2025

சூடுபிடிக்கும் சரிகமப மேடை... வெல்லப் போவது யார்? வெளியேறப் போவது யார்?

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி தான் சரிகமப. இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த சீசனை அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீனிவாசன், விஜய் பிரகாஷ், கார்த்திக் மற்றும் சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று கலக்கி வருகின்றார்கள்.

சரிகமப நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 23 போட்டியாளர்களுடன் தொடங்கி, பரபரப்பான ரவுண்டுகளுடன் இந்த சுற்று நடைபெற்றது. அதில் கடந்த இரண்டு சீசங்களில் பங்கேற்ற பைனலிஸ்ட் போட்டியாளர்கள் சீசன் 4 போட்டியாளர்களுடன் இணைந்து அட்டகாசமாக பாடி இருந்தார்கள்.


மேலும் கடந்த வாரம் ரெட்ரோ ரவுண்ட் நடந்து முடிந்தததை தொடர்ந்து இந்த வாரம் ஒன் அன்ட் ஓன் ரவுண்டு நடைபெற உள்ளது. அதாவது போட்டியாளர்கள் இருவர் நேருக்கு நேராக மோதி கொள்ள உள்ளார்கள். இதற்கான ப்ரோமோக்கள் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த ஒன் அன்ட் ஓன் ரவுண்டில் ஜெயிக்கப் போவது யார்? வெளியேறப் போகும் அந்த போட்டியாளர் யார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement