• Jan 19 2025

இன்று ஓடிடியில் வெளியான படங்கள் என்னென்ன தெரியுமா? லிஸ்ட் இதோ

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புதுப்புது திரைக்கதையுடன் பல படங்கள் வெளியாகக் கொண்டுள்ளன. அதில் ஒரு சில மட்டுமே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனை படைத்து வருகின்றது.

இந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4, விஜய் சேதுபதி நடித்த மகாராஜா,  சூரி நடிப்பில் வெளியான கருடன் மற்றும் தனுஷ் தானே இயக்கி நடித்த ராயன் திரைப்படம் ஆகியவை வசூலில் 100 கோடியை தாண்டி இருந்தன.

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தடுமாற்றம் கண்டது. தியேட்டர்களில் படம் பார்த்த ரசிகர்களுக்கும் சலிப்பை ஏற்படுத்தும் விதமாக இந்த படம் அமைந்துள்ளது.

சில படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், ஒரு சில படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகி உள்ளது. அவ்வாறான படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

இந்த நிலையில் இன்றைய தினம் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

அதன்படி மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் டர்போ. இதில் மம்முட்டியுடன், சுனில், அஞ்சனா ஜெய பிரகாஷ், கபீர்,சித்திக், திலிஷ் போதன் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்தனர். இப்படம் சோனி லிவ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகியுள்ளது.


ஷாலினி ஹர்ஷ்வால் இவர் தற்போது இமாசல பிரதேசத்தில் உள்ள புய்ரா என்ற சிறிய கிராமத்தில் நடக்கும் ஒரு தனித்துவமான கதையை வழங்கும் ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளார். இந்த ஆவண திரைப்படத்திற்கு அவுட் ஆப் எ ஜாம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று இந்த ஆவணப்படம் ஓபன் தியேட்டர் என்ற ஓ.டி.டி தளத்தில் வெளியாகி உள்ளது.


இந்தியாவுக்காக பாராஒலிம்பிக்கில் முதல் முதலில் தங்கப்பதக்கம் வென்ற முரளிகாந்த் பெட்காவின் வாழ்க்கை வரலாறு கதையை சந்து சாம்பியன் என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படமாக உருவானது. இன்று இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகியுள்ளது.


டிரீம் ஹவுஸ் நிறுவனம் தயாரித்த ஹாரர் படத்தை என் ஹாரூன் இயக்கி உள்ள படம் இந்த படத்தில் சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட், ஆகியோர் நடித்துள்ளனர். இன்று இப்படம் ஆஹா தமிழ் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.


இந்தியன் 2 திரைப்படம் இன்று நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.  

Advertisement

Advertisement