• Jan 18 2025

சரிகமப நிகழ்ச்சியில் டைட்டில் வென்ற இலங்கை பெண் கில்மிஷா- உனக்கு மட்டும் இல்லை இது நாட்டுக்கே கிடைத்த வெற்றி... வாழ்த்திய பிரதமர்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ஜீ தமிழில் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி தான் சரிகமப பாடல் நிகழ்ச்சி. பெரியவர்கள், சிறியவர்கள் என நிறைய சீசன்கள் மாறி மாறி ஒளிபரப்பாகி வந்தது. கடைசியாக சரிகமப Lil Champs 3வது சீசன் ஒளிபரப்பானது, நிகழ்ச்சியின் இறுதிக்கட்ட எபிசோடும் முடிவுக்கு வந்தது.

இந்த சீசனின் வெற்றியாளராக இலங்கை பெண் கில்மிஷா ஜெயித்துள்ளார். இவர் விருதை வென்றதற்கு ரசிகர்கள் அனைவருமே வாழ்த்து கூறி வருகிறார்கள்.


இலங்கை மண்ணுக்கே பெருமை தேடி தந்துள்ளார் என்பதால் இலங்கை மக்களும் அவரது வெற்றியை கொண்டாடி வருகின்றனர். 


இந்த நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சரிகமப நிகழ்ச்சியில் வென்ற கில்மிஷாவிற்கு வாழ்த்து கூறியுள்ளார்.உன்னுடைய இந்த வெற்றி உனக்கு கிடைத்த வெற்றியும் தாண்டி யாழ்ப்பாணம் மற்றும் இலங்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என பாராட்டியுள்ளார். இந்த தகவல் தற்போது சமுக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

Advertisement

Advertisement