• Oct 14 2026

சிவாங்கி குரலில் கொஞ்சும் மைனாக்களே பாடல்! அது மைனா இல்ல கொஞ்சம் அஜெஸ்ட் பண்ணிக்கோங்க!

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி. இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமார் மகள் ஆவார். விஜய் தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி தனது மென்மையான குரலால் பல ரசிகர்களை கவர்ந்தார்.


இவரின் குரலுக்கென உலகெங்கும் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. எப்பொழுதும் குழந்தை போல நகைச்சுவையாக சிவாங்கி வெளிப்படையாக பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவர் ஆகினார்.பெரும் பாடகியாக வேண்டும் என்பதே இவரது கனவு அதன்படி இவர் பல ஆல்பம் பாடல்களையும் பாடியுள்ளார்.


இவரின் நகைச்சுவைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு என்பதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. இவரின் வெகுளி தனமான பேச்சினால் பல ரசிகர்களையும் சிரிக்க வைத்து தனது வசம் இழுத்தார். தற்போது சேலையில் ரசிகர்களுக்காக கொஞ்சும் மைனாக்களே பாடலை அழகாக பாடி வெளியிட்டுள்ளார்.  


அதில் அவர் கையில் கிளியை வைத்துள்ளார். மேலும் எனக்கு தெரியும் அது மைனா இலை பட் கொஞ்சம் அஜெஸ்ட் பண்ணிக்கோங்க என்று கூறியுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. அத்துடன் ரசிகர்கள் லைக்ஸினை குவித்து வருகிறார்கள்.இதோ அந்த வீடியோ... 




Advertisement

Advertisement