• Jan 19 2025

வேட்டையன் வச்ச குறி தப்புமா? பாசிட்டிவ் விமர்சங்களை அள்ளி வீசிய பப்ளிக்..

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இதைத்தொடர்ந்து தற்போது ரஜினிகாந்தின் 170-வது திரைப்படமாக த.செ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படம் இன்றைய தினம் ரிலீசாகி உள்ளது.

இந்த படத்தை லைகா நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. இதற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இவருடைய இசையில் வெளியான மனசிலாயோ, ஹண்டர் வண்டார் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டடித்து விட்டன.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வேட்டையன்  திரைப்படம் இன்றைய தினம் ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை பார்த்த  ரசிகர்களின் விமர்சனம் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி ரஜினிகாந்த் வச்ச குறி தப்பிச்சா? இல்லையா? என்பதை விமர்சனத்தின் மூலம் பார்ப்போம்.

கடந்த ஆண்டு இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த ஜெயிலர் படத்தை விட வேட்டையன் படம் செம மாஸாக உள்ளது. இந்தப் படத்தின் முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக காணப்பட்டதோடு ஒரு சீன் கூட போர் அடிக்காமல்  சென்றதாக ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.


ரஜினிகாந்தை விட இந்த படத்தில் பகத் பாஸில் வரும் காட்சிகள் எல்லாமே அடிபொலியாக காணப்படுகின்றது. எப்போதுமே தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை கச்சிதமாக செய்யும் அவர் இந்தப் படத்திலும் கெத்து காட்டியுள்ளார்.

மேலும் இன்னும் ஒரு ரசிகர் கூறுகையில், வேட்டையன் படத்தின் முதல் பாதி கண் சிமிட்ட கூட நேரமில்லாத அளவுக்கு சீட்டை விட்டு நகர முடியாமலும் திரைக்கதையை ஞானவேல் செம்மையாக வடிவமைத்துள்ளார்.  இந்த படம் பிளாக் பாஸ்டர் படமாக கட்டாயம் அமையும்

மேலும் ரஜினிகாந்தின் மாஸ் ஸ்டைல் எல்லாமே சரியாக எடுத்துக்காட்டி ரசிகர்களுக்கு தரமான ரீட்டை கொடுத்துள்ளார் ஞானவேல். நிச்சயமாக ஜெயிலர் படத்தை விட அதிக வசூலில் வேட்டையாடும். மேலும் படத்தில் சோசியல் மெசேஜை பக்கவாக சொல்லியுள்ளார் இயக்குனர். அடுத்து என்ன ஆகும் என்ற பரபரப்பு காணப்படுகிறது. அனைத்தையும் செதுக்கி அசத்தியுள்ளார். இந்த படம் நிச்சயமாக வெற்றி படம்தான் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Advertisement

Advertisement