• Apr 27 2024

மீண்டும் ஆரம்பமாகியது இந்தியன் 2 படத்தின் ஷுட்டிங்- எங்கு நடைபெறுகின்றது தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் இந்தியன் 2. இப்படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்தே இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முதலே ஆரம்பமாகியது.

இருப்பினும் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட பாரிய விபத்து காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே இடை நிறுத்தப்பட்டது.அத்தோடு ஷங்கரும் நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்கும் பணிகளில் பிஸியாகி விட்டார்.இருப்பினும் இப்படப்பிடிப்பு இந்த மாதம் ஆரம்பமாகும் என்று கூறப்பட்டது. 


அதன்படி  இந்தியன் 2 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னை விமான நிலையத்தில் இன்று தொடங்கியுள்ளனர். 20-ஆம் தேதி வரை சென்னையில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதை முடித்துக் கொண்டு மீண்டும் ராம்சரண் படத்திற்கு செல்வார் ஷங்கர்.

சென்னை சுற்றியுள்ள பகுதிகளில் மொத்தம் 12 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் நடிகர் சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement

Advertisement