• Jan 19 2025

கோட் படத்தை பார்த்து காரித்துப்பிய சீரியல் நடிகை..! எழுந்து பாதியிலேயே ஓட்டம் வேறு..

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியலில் நடித்து பிரபலமானவர் தான் நிமிர்சிகா. இவர் சமீபத்தில் கோட் படம் பற்றி அளித்த பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த திரைப்படம் தான் கோட். இந்த படத்தில் முன்னணி நட்சத்திரங்கள் ஆன பிரபுதேவா, அஜ்மல், பிரசாந்த், லைலா, சினேகா, மோகன், யோகி பாபு, வைபவ், பிரேம்ஜி என மிகப் பெரிய நடிகர் கூட்டமே நடித்து இருந்தது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார்.

கோட் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான போது அது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்றபோது வசூலில் 500 கோடிகளை கடந்து இருந்தது.

d_i_a

எனினும் இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் இளமையான விஜய் மற்றும் விஜயகாந்த் ஆகியோரை காட்டிய விதம் பலருக்கும் சலிப்பை ஏற்படுத்தி இருந்தது. 

இந்த நிலையில், கோட் படத்தை பார்க்க பிடிக்காமல் பாதியிலேயே ஓடி வந்து விட்டதாக நடிகை நிமிர்சிகா பேட்டி கொடுத்துள்ளார்.


மேலும் அவர் கூறுகையில், தளபதியோட கோட் படம் தான்  கடைசியாக பார்த்தேன். அதில் இளம் வயது விஜய்யை காட்டுறேன்னு, ஸ்பைக் எல்லாம் வைத்து தளபதியை ரொம்பவே மோசமாக காட்டிட்டாங்க..

இதை பார்த்ததும் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க எங்க தளபதியைன்னு நினைச்சேன். நான் தல ஃபேனாக இருந்தாலும் தளபதி விஜய்யையும் ரொம்பவே பிடிக்கும். அவரது படங்களைத்தான் பொதுவாக அதிகம் தியேட்டரில் பார்ப்பேன் என கூறியுள்ளார். தற்போது இவர் வழங்கிய பேட்டி வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement