• Apr 27 2024

இரண்டாவது வைல்ட் கார்ட் என்றி இந்த பிரபலத்தின் மகள் தானாம்-யாரும் எதிர்பார்க்காத ருவிஸ்ட்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

20போட்டியாளர்களுடன் விஜய் டிவியில் ஆரம்பமாகிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 6.இது 24 மணிநேரமும் ஹொட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பித்த நாளிலிருந்து விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றது. இதனால் பார்வையாளர்களும் சலிப்படையாமல் பார்த்து வருகின்றனர்.

இதில் முதல் வைல்ட் கார்ட் என்றியாக மைனா நுழைந்து 21 போட்டியாளர்களாக காணப்பட்ட நிலையில்  இந்த வீட்டிலிருந்து ஜிபி முத்து ,சாந்தி மாஸ்டர், அசல் ஆகியோர் இதுவரை வெளியேறியுள்ளனர். இன்றும்  கமல்ஹாசன் எப்பிஷோட் என்பதால் போட்டியாளர்கள் தம்மை தயார்ப்படுத்தியும் வருகின்றனர்.

இவ்வாறுஇருக்கையில்  இந்த வாரம் குறைவான வாக்குகளை ஷெரினா பெற்று வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

இது ஒரு புறம் இருக்க  பிக்பாஸ் வீட்டில் இருந்து குறைந்த வாக்குகளை பெற்று சிலர் வெளியேறிய நிலையில் இரண்டாவது வைல்ட்கார்ட் என்றி வரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.அதாவது அது வேற யாரும் இல்லை ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா தான்.அதாவது விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்த பாண்டியம்மா.இவர் சர்வைவர் ஷோவிலும் பங்கு பற்றி முதல் ஆளாக வெளியேறி இருந்தார்.



ஆனால் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து எந்தனை நாட்கள் தாக்கு பிடிப்பார் என்பதையும் பார்ப்போம்.ஆனால் இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை பொறுத்திருந்தே பாரக்க வேண்டும்.



Advertisement

Advertisement

Advertisement