• Apr 26 2024

மாஸாக வெளிவந்த தளபதி 67 படத்தின் ப்ரமோ வீடியோ.. டைட்டில் இதுதான்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் சமீபத்தில் வாரிசு படம் வெளியாகி இருந்தது. இப்படத்தினைத் தொடர்ந்து விஜய் 'தளபதி 67' இல் நடிக்க இருப்பதாகவும், அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளதாகவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.



இதனைத் தொடர்ந்து அப்படம் குறித்த ஒவ்வொரு அப்டேட்டுகளும் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட வண்ணமே இருக்கின்றன. அந்தவகையில் இதில் நீண்டகால இடைவெளியின் பின் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து மன்சூர் அலிகான், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், மலையாள நடிகர் மேத்யூ, பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிக்க இருக்கின்றது.



 லலித் குமார் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இதற்காக விஜய், திரிஷா உள்பட படக்குழுவினர் அனைவரும் காஷ்மீரில் தங்கி முகாமிட்டுள்ளனர். அத்தோடு இரண்டு மாதங்கள் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளார் அப்படத்தினுடைய இயக்குநர் லோகேஷ். 



இந்நிலையில் தளபதி 67 படத்தின் டைட்டில் ப்ரமோ வெளியாகி உள்ளது.அத்தோடு இப் படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது.ப்ரமோ வீடியோவை பார்த்தால் லியோ கண்டிப்பாக எல்.சி.யூ. கதை போன்று தெரிகிறது.இதோ அந்த ப்ரமோ...






Advertisement

Advertisement

Advertisement