• Jan 19 2025

சினேகன் அளித்த புகார்! வீட்டு கதவை தட்டிய போலீசார்! நடிகை ஜெயலட்சுமி வீட்டில் போலீஸ் அதிரடி சோதனை!

subiththira / 10 months ago

Advertisement

Listen News!

பா.ஐ.க நிர்வாகியும், நடிகையுமான ஜெயலட்சுமி வீட்டில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


சென்னை திருமங்களத்தில் உள்ள சின்னத்திரை நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான ஜெயலட்சுமி வீட்டில் தற்போது  திருமங்களம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். திரைப்பட பாடல் ஆசிரியரான கவிஞர் சினேகன் கடந்த 2018ம் முதல் சிநேகம் என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வருகிறார்.


தனது அறக்கட்டளை பெயரினை நடிகை ஜெயலட்சுமி தவறாக பயன்படுத்தி பண மோசடி  செய்ததாக கவிஞர் சினேகன் சென்னை காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் திருமங்களம் போலீசார் ஜெயலட்சுமி வீட்டில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 இந்த புகார் தொடர்பாக விசாரணை செய்த போது கவிஞர் சினேகன் தன் மீது பொய்யான புகார் தெரிவித்துள்ளார் என சென்னை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனை அடுத்து சினேகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  இதனை தீர விசாரித்த நீதிபதி சினேகன் மீதான வழக்கினை ரத்து செய்தார். இதனை அடுத்து நடிகை ஜெயலட்சுமி வீட்டில் தற்போது போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement