• Jul 27 2024

துளியும் மேக்கப் இல்லாமல் பட்டுப்புடவையில் ஜொலிக்கும் சிறகடிகை ஆசை சீரியல் நடிகை! போட்டோஸ் இதோ...

Aathira / 5 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பராக ஓடிக் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கு என்றே ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் காணப்படுகின்றது.

சிறகடிக்க ஆசை சீரியலில் ரொம்பவும் பாவமாக, அழகாக, எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஒரு கதாபாத்திரம் என்றால் அது மீனாவுடைய கதாபாத்திரம் தான். அதாவது, இந்த கதாபாத்திரத்தில் நடிக்கின்றவர் தான் நடிகை கோமதி பிரியா.

1993 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த கோமதி பிரியா, நடுத்தர குடும்பத்தை பின்னணியாக கொண்டவர். இவர், சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் தனது  பெற்றோருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது, தம்பி தங்கச்சிகளை தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கடுமையாக உழைக்கவே ஆரம்பித்துள்ளார்.


இதையடுத்து, விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் சீரியல் மூலம் ஓரளவுக்கு மக்கள் மத்தியில பிரபலம் ஆனார் கோமதிப்பிரியா.

ஆனால் இவருடைய வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது சிறகடிக்க ஆசை சீரியல் தான். இந்த சீரியலில் நடித்ததன் மூலம் பல்வேறு இல்லத்தரசிகள், ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஒரு நடிகையாக வலம் வருகிறார் கோமதி பிரியா.


இந்த நிலையில், கோமதி பிரியா பிப்ரவரி 8ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.

துளி கூட மேக்கப் இல்லாமல் கோமதி பிரியா இருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர்.  


Advertisement

Advertisement