தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பு மற்றும் அழகான தோற்றத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை ரம்யா பாண்டியன். சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் போட்டோஷூட் பதிவுகள் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகின்றன.
குறிப்பாக, வித்தியாசமான உடைகள் மற்றும் ஸ்டைலான தோற்றத்தில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில், தற்போது பாங்காக் சென்றுள்ள ரம்யா பாண்டியன், அங்கு எடுத்துக்கொண்டுள்ள அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சுற்றுலா பயணத்தின் ஒரு பகுதியாக பல்வேறு அழகிய இடங்களில் வலம் வரும் அவர், ஸ்டைலான உடையில் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து தனது பயண அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த புகைப்படங்களில் ரம்யா பாண்டியனின் இயல்பான அழகும், தன்னம்பிக்கையான தோற்றமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரது தோற்றத்தை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதனால், அவர் வெளியிட்டுள்ள இந்த பாங்காக் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
Listen News!