• Apr 24 2026

வாக்களித்த மக்களுக்கு விஜய் சொன்ன அந்த ஒரு வார்த்தை! லீக்கான தவெக தலைவரின் பதிவு

shali / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 அமைதியாகவும் சிறப்பாகவும் நிறைவு பெற்ற நிலையில், அரசியல் சூழல் உற்சாகமாக மாறியுள்ளது. இந்த நிலையில், விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் கட்சியின் செயல்பாடுகள் பெரிதும் கவனம் ஈர்த்துள்ளன. தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து, தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


அவர் தனது பதிவில், “தமிழகத் தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழ்நாட்டு மக்களாகிய, என் பாட்டி, அம்மா, அக்கா, தங்கைகள், என் தாத்தா, அப்பா, அண்ணன், தம்பிகள், என் குடும்ப உறவுகள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றியறிதலைக் காணிக்கையாக்குகிறேன்” என்று உணர்ச்சி பூர்வமாக குறிப்பிட்டுள்ளார். இந்த வரிகள், பொதுமக்களை தனது குடும்ப உறுப்பினர்களாகக் கருதி அவர் அணுகும் தன்மையை வெளிப்படுத்துகிறது.

மேலும், “நம் குடும்பத்தினரை வழிநடத்திய என் குட்டி நண்பா நண்பீஸ்க்கு என்னுடைய – உங்கள் விஜய் மாமாவின் ஸ்பெஷல் வணக்கமும் நன்றியும்” என்று கூறியிருப்பது, இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. விஜயின் இந்த எளிமையான, அன்பான உரை பலரையும் கவர்ந்துள்ளது.

இந்த பதிவு வெளியானதும், ரசிகர்கள் மற்றும் கட்சியினர்கள் இதனை பரவலாக பகிர்ந்து வருகின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே, மக்களிடம் நன்றி தெரிவிக்கும் விஜயின் இந்த நடைமுறை, அரசியல் வட்டாரங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது. அவரது இந்த பதிவு, மக்கள் மற்றும் தலைவருக்கிடையிலான நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement