• Jun 03 2023

ஐஸ் பெட்டியைக் கட்டிப்பிடித்து கலங்கிப் போய் நின்ற எம்.எஸ்.பாஸ்கர்... பார்வையாளர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்த தருணம்..!

Prema / 4 weeks ago

Advertisement

Listen News!

பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த நடிகர் மனோபாலா, நட்புக்காக படத்தின் மூலம் முழுநேர நடிகராக மாறினார். அதன் பின்னர் ரஜினி, விஜய், அஜித், தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம், சூர்யா, மாதவன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். 


இந்நிலையில் கல்லீரல் பிரச்சினை காரணமாக வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். இவரின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று என்று நம் அனைவருக்கும் தெரியும். இதற்கு பலரும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில் நடிகர் எம்.எஸ். பாஸ்கரும் அஞ்சலி செலுத்தி இருக்கின்றார்.


அந்தவகையில் அஞ்சலி செலுத்தச் சென்ற எம்.எஸ். பாஸ்கர் மனோபாலா உடல் வைக்கப்பட்டுள்ள ஐஸ் பெட்டியைக் கட்டிப் பிடித்து கண் கலங்கியவாறு ஒரு நிமிஷம் உருகிப் போய் நின்றுள்ளார். இந்த சம்பவமானது அங்கு குழுமி நின்ற அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்து இருக்கின்றது.


Advertisement

Advertisement

Advertisement