தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் சூரி. கடந்த சில வாரங்களில் வெளியான அவரது திரைப்படமான ‘மாமன்’ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆபிஸ் வசூலாகவும், "மாமன்" பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ள நிலையில், இந்த வெற்றிக்கு பின்புலமாக செயல்பட்ட ஒரு குழுவிற்கு அவர் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றியை தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில் சூரி, “ஒரு நல்ல படம் மக்களின் மனங்களில் சேருவதற்கேற்ற வகையில் முயற்சி செய்ய ஒரு அருமையான குழுவின் ஆதரவு அவசியம். எங்கள் மாமன் படத்திற்கு அந்த ஆதரவாக இருந்தது Vimi Magic குழு.
அவர்கள் செய்த விளம்பர வேலைகள் மிக அழகாகவும், செம்மையாகவும், மக்களை நேராக தொடும் விதமாகவும் இருந்தது. ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் காட்டிய நம்பிக்கையும், அக்கறையும், அர்ப்பணிப்பும் எங்களை மெய்மறக்க செய்தது.
எங்களை ஒரு குடும்ப உறுப்பினரைப் போல நடத்தி, இந்த பயணத்தை சிறப்பாக்கிய Vimi Magic குழுவிற்கு என் மனமார்ந்த நன்றிகள். உங்கள் பணி என்றும் மறக்கமுடியாத ஒன்று!” என சூரி தனது வெற்றிக்கு பின்புலத்தில் இருந்த மற்றொரு சக்தியாக விளங்கிய குழுவிற்கு பொதுவெளியில் பாராட்டு கூறியிருக்கிறார்.
Listen News!