• May 08 2026

மாபெரும் ஹிட் அடித்த 'யூத்' திரைப்படம்.. கென் கருணாஸுக்கு தயாரிப்பாளர் கொடுத்த கிஃப்ட்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விடுதலை 2, அசுரன், வாத்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துத் தனது திறமையை வெளிப்படுத்தியவர் கென் கருணாஸ். அவர் இயக்கி நடித்துள்ள திரைப்படம் “யூத்”, தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

பார்வதா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்ட்ரீட் பாய்ஸ் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இதில் அனிஷ்மா, மீனாட்சி தினேஷ், பிரியன்ஷி யாதவ் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

பள்ளி வாழ்க்கையை மையமாகக் கொண்டு, மாணவர்கள் இடையே உருவாகும் மோதல்கள், காதல், நகைச்சுவை மற்றும் உணர்ச்சி சம்பவங்களை இப்படம் வெளிப்படுத்துகிறது. அதே நேரத்தில், பெற்றோர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் எதார்த்தமாக சித்தரித்துள்ளது.

படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, இதுவரை 60 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து, படத்தின் வெற்றி விழா (Success Meet) சமீபத்தில் நடைபெற்றது.


இந்த நிகழ்வில் பேசிய தயாரிப்பாளர் கருப்பையா, “இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு கென்னுக்கு என்ன பரிசு வழங்கப் போகிறேன் என்று பலரும் கேட்டனர். ஆனால், நான் ஆரம்பத்திலேயே ஒரு முக்கிய முடிவு எடுத்திருந்தேன். அதாவது, இந்தப் படத்தின் வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை இயக்குநருக்கு வழங்கியுள்ளேன். இனி வரும் எனது அனைத்து படங்களிலும் இதே முறையை பின்பற்றுவேன்” என தெரிவித்தார்.

மேலும், “நானும் இயக்குனராக வரவேண்டும் என்ற ஆசையில் தான் இந்த துறையில் நுழைந்தேன். இதனால் பல சிரமங்களை நன்றாகவே புரிந்து வைத்துள்ளேன. இயக்குநர்கள் தான் ஒரு படத்தின் முதுகெலும்பு. அவர்கள் வெற்றி பெற பணம் மட்டுமின்றி, அனைத்து தரப்பிலும் ஆதரவு வழங்கப்பட வேண்டும். அதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்றும் அவர் கூறினார்.

Advertisement

Advertisement