• Apr 16 2026

திடீரென மகாநதி சீரியலில் இருந்து விலகிய கதாநாயகி- அவருக்கு பதிலாக இனி யார் தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று தான் மகாநதி. இந்த சீரியலில் காவேரிக்கும் விஜய்க்கும் திருமணம் ரகசியமாக நடைபெற்றதால் விஜய்யின் வீட்டாரால் திருமண வரவேற்பு நடைபெறுகின்றது.

இந்த திருமண வரவேற்பில் பசுபதி நிவினும் காவேரியும் காதலிக்கும் போது எடுத்த போட்டோக்களை வீடியோவாக செய்து கொண்டு வந்து எல்லோர் முன்னாடியும் போட்டுக் காட்டி விடுகின்றார்.


இருந்தாலும் விஜய், காவேரி என் பொண்டாட்டி அவ கல்யாணத்திற்கு முதல் எப்படி இருந்தா என்பதெல்லாம் எனக்கு வேணாம். இப்போ எனக்கு அவ பொண்டாட்டி அவளைப் பற்றி தப்பா பேச உரிமை இல்லை எனத் திட்டி அனுப்புகின்றார்.

இதனால் எல்லோரும் சந்தோசமாக இருக்கின்றனர் இந்த சூழலில் சீரியலில் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதாவது இதுவரை கங்கா காரக்டரில் நடித்து வந்தவர் சீரியலில் இருந்து விலகியதால் அவருக்கு பதிலாக பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனியாக நடிப்பவர் புதிய கங்காவாக இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement