• Apr 30 2026

பிரம்மாண்டத்தின் உச்சம்.! விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகாவின் திருமண நகைகள் இத்தனை கோடியா.?

shali / 2 months ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஒருவராக பேசப்பட்டு வந்த ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரின் திருமணம் அண்மையில் நடைபெற்று ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது.


பிப்ரவரி 26ஆம் தேதி ராஜஸ்தானின் அழகிய நகரமான உதய்பூரில் மிகுந்த மரியாதையுடனும், குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடனும் இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்த விழாவில் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமணத்தைத் தொடர்ந்து, மார்ச் 4ஆம் தேதி ஹைதராபாத் நகரில் பிரமாண்டமான ரிசப்ஷன் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வரவேற்பு விழாவில் திரையுலகின் முன்னணி பிரபலங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்நிலையில், திருமணத்தின் போது இருவரும் அணிந்திருந்த தங்க நகைகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, அவர்கள் அணிந்திருந்த நகைகளின் மதிப்பு சுமார் ரூ.4 கோடி முதல் ரூ.7 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும், அந்த நகைகளின் மொத்த எடை சுமார் 2 முதல் 3 கிலோ வரை இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மணமக்கள் அணிந்திருந்த நகைகள் பாரம்பரிய வடிவமைப்பில், மிகுந்த கைவினைப் பணியுடன் தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement