• Jun 03 2026

இதுக்கு மட்டும் குறைச்சல் இல்லை.. மனோஜ் ஆடிய ஆட்டம்! மீனாவுக்கு இது தேவையா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னிலை வகித்து வருகிறது.

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து, மீனாவின் கேரக்டர் தான் முக்கியமான கேரக்டராக காணப்படுகிறது. இந்த ஜோடிக்கு என்று தனியே ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது. 

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கேரக்டரில் நடித்து வருபவர் தான் கோமதி பிரியா. இவர் தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளத்திலும் இந்த சீரியலின் ரீமேக்கில் நடித்து வருகின்றார். மலையாளத்திலும் இந்த சீரியல் மிகவும் பிரபலமாக காணப்படுகிறது.


சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா தான் அடிக்கடி ரிலீஸ் செய்யும் நபர் எனவும் அண்மையில் இந்த டீம் வெளியிட்ட பேட்டியில் தெரிவித்துள்ளார்கள். அதுபோலவே அவரும் தனக்கு கிடைக்கும் சின்ன சின்ன டைம்களில் ரிலீஸ் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் பூனையும் எலியுமாக  இருக்கும் மீனாவும் மனோஜூம் தற்போது ரீல்ஸ் ஒன்றை செய்து வெளியிட்டுள்ளார்கள். இதை பார்த்து ரசிகர்கள் உங்களுடைய காம்போ அழகா இருக்குது என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement