தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமான மதராஸியில், முதன்முறையாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸுடன் இணைய உள்ளார். இந்த மாஸ் மற்றும் ஆக்ஷன் கலந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் மற்றும் டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மதராஸி படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, இசையை அனிருத் ரவிச்சந்தர் அமைத்துள்ளார். ஏற்கனவே டாக்டர், டான் போன்ற படங்களில் ஹிட் கொடுத்த அனிருத்-சிவகார்த்திகேயன் கூட்டணி மீண்டும் இணைய இருப்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் புரொமோ நாளை (ஜூலை 29) மாலை 5 மணிக்கு வெளியானதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். மதராஸி திரைப்படம் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. தற்போது படத்தின் ஷூட்டிங் பணிகள் முழுமையாக முடிந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டமாக நடைபெற்று வருகிறது.சிவகார்த்திகேயனின் புதிய லுக், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கம் மற்றும் அனிருத் இசை என மூன்று சூப்பர் ஹிட் அம்சங்கள் உள்ள இந்த படம், 2025ஆம் ஆண்டின் மிக முக்கியமான ரிலீஸாகக் கருதப்படுகிறது.
Listen News!