• Oct 12 2025

வெளியானது அமரன் திரைப்படத்தின் "ஹே மின்னலே' முதல் சிங்கிள்... எப்போ full song ரிலீஸ் தெரியுமா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

மறைந்த ராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையைச் சொல்கிற படம் " அமரன்" சிவகார்த்திகேயனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமரன் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலுக்கு ' ஹே மின்னலே ' என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ், முன்னணி நடிகர்களின் புதிய புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, சிங்கிள் பாடல் அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். சுவாரஸ்யமாக, இந்தப் பாடல் ஜி.வி.பிரகாஷின் 700வது இசையமைப்பைக் குறிக்கிறது.


ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன்  படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார் .அமரன்  படத்தில் சிவகார்த்திகேயன் இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமெண்டில் நியமிக்கப்பட்ட மேஜர் முகுந்த் வரதராஜனாக நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின்  "ஹே மின்னலே" பாடல் நாளை வெளியாகியுள்ள நிலையில் தற்போது அந்த பாடலுக்கான ப்ரோமோ சோங் வெளியாகி வைரலாகி வருகிறது இதோ அந்த பாடல்... 



Advertisement

Advertisement