• Mar 08 2026

யார் ஜெயிப்பாங்கன்னு தெரியாது... ஆனா மனிதகுலம் ஜெயிக்கணும்! போர் குறித்து மம்முட்டி பகீர்

shali / 6 days ago

Advertisement

Listen News!

அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன என்ற தகவல்கள் சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில், உலக நாடுகள் இதை கவனத்துடன் நோட்டமிட்டு வருகின்றன. இந்த தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து உருவாகியுள்ள பதற்ற நிலை குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ள கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மம்முட்டியிடம், சர்வதேச அரசியல் சூழ்நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,“தற்போது ஒரு போர் நடந்து கொண்டிருக்கிறது. யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. மனிதகுலம் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.”என்று தெரிவித்தார்.

அவரின் இந்த சுருக்கமான, ஆனால் ஆழமான கருத்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. எந்த நாடு வெற்றி பெற வேண்டும் என்ற பார்வையை விட, மனிதநேயம் மற்றும் உலக அமைதியே முக்கியம் என்ற நோக்கத்தை அவர் வலியுறுத்தியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement