• May 27 2026

யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டுடன் வெளியானது 'கேம் பிளே' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புதிய கதைக்களங்களுடன் உருவாகும் திரைப்படங்களுக்கு சமீப காலமாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில், இயக்குநர் சிவநேசன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் தான் ‘கேம் ப்ளே’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.


இந்த திரைப்படத்தில் கிஷோர், சாருகேஷ் மற்றும் ஷாலி நிவேகாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதைக்களம் மற்றும் புதுமையான காட்சிப்படுத்தலுடன் உருவாகும் இப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இறுதிக்கட்ட பணிகள், குறிப்பாக எடிட்டிங், பின்னணி இசை, மற்றும் தொழில்நுட்ப வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அனைத்து பணிகளும் விரைவாக முடிவடைந்தால், படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement