கடந்த 1999 ஆம் ஆண்டு கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் ஹீரோவாகவும், ரம்யா கிருஷ்ணன் வில்லியாகவும் நடித்து வெளியான திரைப்படம் தான் படையப்பா. இந்த படம் மெகா ப்ளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்தது.
தற்போது ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு படையப்பா படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது . இந்தப் படம் பற்றி ரஜினி கூறுகையில், இந்த படத்திற்கான கதையை தானே தயாரித்திருந்ததாகவும் பொன்னியின் செல்வன் நாவலில் இடம் பெற்ற கதையை மையமாகக் கொண்டு நந்தினி கேரக்டரை வைத்து தான் அதன் மூலக் கதையை உருவாக்கியதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த படத்தில் நடிப்பதற்கு முதலில் ஐஸ்வர்யா ராயை அணுகியதாகவும், அவர் மறுப்பு தெரிவிக்கவே ரம்யா கிருஷ்ணனை தேர்ந்தெடுத்ததாகவும் தெரிவித்தார். அத்துடன் படையப்பா படத்தில் நடிப்பதற்கு சிவாஜி கூட அதிக சம்பளம் கேட்டதாக குறிப்பிட்டார்.

முழுக்க முழுக்க கமர்சியல் பேக்கேஜாக உருவாகிய படையப்பா படம் மெகா ப்ளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்தது. அதில் ரஜினியின் ஸ்டைல், ரவிக்குமாரின் ஸ்கிறீன் பிளே, ரம்யா கிருஷ்ணனின் மிரட்டலான நடிப்பு என அனைத்துமே அந்தப் படத்தில் ஒர்க் அவுட் ஆகி இருந்தது.
இந்த நிலையில், படையப்பா படம் மறு வெளியீட்டிலும் வசூல் சாதனை புரிந்துள்ளதாம். அதன்படி முதல் நாளில் மட்டும் ஆறு கோடிக்கு மேல் வசூல் செய்ததாகவும் உலகமெங்கும் 700 திரையரங்குகளில் வெளியான படையப்பாவுக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்ததன் காரணத்தினால் இன்னும் 100 திரையரங்குகள் அதிகரிக்கப்பட உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!