• Apr 17 2026

விஜய் சேதுபதி சரிபட்டு வரமாட்டார்.! கொந்தளிக்கும் பிக் பாஸ் ரசிகர்கள்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் வீட்டில் தற்போது  லவ் பேர்ட்ஸ் ஆக காணப்படும் விஜே பார்வதி மற்றும் கமருதீனை தான் வெளியேற்ற வேண்டும் என்று ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள். அவர்கள் இருவரும் எல்லை மீறி செயற்பட்டு வருகின்றனர். 

மைக்கை கழற்றாதீர்கள், மறைத்து பேசாதீர்கள் என்று பிக் பாஸ் பலமுறை கூறியும் அவர்கள் கேட்கவில்லை.  இறுதியாக அவர்கள் இருவரும் சீக்ரெட் ரூமுக்குள் செல்ல , உடனே அலர்ட் ஆன பிக் பாஸ் அவர்களை வெளியே அனுப்பி இருந்தார்.  

இதனால் பார்வதிக்கும் கமருதீனுக்கும் தனியாக இருக்கத்தான் பிடித்திருக்கிறது. அவர்களுக்கு பிரேவசி கொடுக்க அவர்களை வெளியேற்றுங்கள் என்று ரசிகர்கள் தங்களுடைய விமர்சனங்களை முன்வைத்து வந்தனர். 


எனினும்  வழக்கம் போலவே இந்த வாரமும் வந்த  பார்வதி மற்றும் கமருதீனை திட்ட மட்டும் தான் செய்துள்ளார் விஜய் சேதுபதி,  மேலும் அவர்கள் எவ்வளவு அட்டகாசம் செய்தாலும் லேசாக திட்டி விட்டு அடுத்த வேலையை பார்க்கச் சொல்லிவிடுகின்றார் விஜய் சேதுபதி, இது தவறான முன்னுதாரணமாக காணப்படுகிறது, 

இந்த நிலையில்,  பாரு கம்முக்கு பதிலாக ரம்யா, வியானாவை வெளியேற்றி விட்டார்கள்.  இதனால்  நாம் என்ன செய்தாலும் எவிட் செய்ய மாட்டார்கள் என்ற தைரியம் அனைத்து போட்டியாளர்களுக்கும் வந்துவிடும்.  இவர்களின் வெளியேற்றம் தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement