• May 20 2024

யோகிபாபுவின் நடிப்பில் உருவாகியுள்ள"பன்னிக்குட்டி" படத்தின் ரிலீஸ் திகதியை அறிவித்த படக்குழு

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மக்கள் பலரின் மனதைக் கொள்ளை கொண்டவரே நடிகர் யோகிபாபு. தனது டைம்மிங் காமெடியால் ஏராளமான ரசிகர்கள் மனதைக் கவர்ந்து இழுப்பவர். இவரின் நகைச்சுவை நடிப்பை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.

மேலும் நடிகர் யோகிபாபு ரஜினி, அஜித், விஜய், ஜெயம் ரவி எனப்பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல், சில காமெடி படங்களில் கதையின் நாயகனாகவும் இவரே நடித்து வருகின்றார். அத்தோடு எந்த விதமான காமெடி காட்சியாக இருந்தாலும் அதில் இறங்கி திறமையாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது இவர் இயக்குநர் அனுசரனின் இயக்கத்தில் "பன்னிக்குட்டி" என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாகவும் காமெடியனாகவும் யோகிபாபுவே நடித்துள்ளார். மேலும் யோகிபாபுவுடன் இணைந்து கருணாகரன், சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, T.P.கஜேந்திரன், லக்ஷ்மி பிரியா, ராமர், தங்கதுரை உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இப்படத்தினுடைய கதையானது முழுக்க முழுக்க பன்னிக்குட்டியுடன் யோகிபாபு அடிக்கும் லூட்டியை மையப்படுத்தியே அமைந்திருக்கின்றது. இந்நிலையில் தற்போது பன்னிக்குட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஜூலை 08-ஆம் திகதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இதனால் மகிழ்ச்சியடைந்த யோகிபாபுவின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement