• May 20 2024

திரைப்பட பயிற்சி மாணவர்கள் உருவாக்கத்தில் அற்றைத் திங்கள் அந்நிலவில் என்னும் புதிய படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

திரைப்பட இயக்குநர்களைப் போலவே திரைப்பட பயிற்சி மாணவர்களும் காலத்திற்கு காலம் பல திரைப்படங்களை உருவாக்கி வருகின்றார்கள். இந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் திரைப்பட பயிற்சி மாணவர்கள் இணைந்து ஒரு படத்தை உருவாக்கியுள்ளனர். அப்படத்திற்கு 'அற்றைத் திங்கள் அந்நிலவில்' எனப் பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தில் ஹீரோவாக நவீன் குமாரும், ஹீரோயினாக லாவண்யாவும் நடித்திருக்கின்றார்கள். மாடலின் துறையில் பிரபலமாக இருக்கின்ற லாவண்யா மிஸ்.தமிழ்நாடு உள்ளிட்ட பல விருதுகளினையும் வென்றிருக்கின்றார். மேலும் இவர்களுடன் இணைந்து சுவாதி, ப்ரேமா உள்ளிட்ட பல புதுமுக நடிகர், நடிகைகளும் அறிமுகமாகின்றார்கள்.

மேலும் எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன் இப்படத்தினை இயக்கியுள்ளதோடு, தாஜ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஆர்.சி.ஐயப்பன் தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் இயக்குனரான எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன் பிரபல இயக்குநர்களான கே.பாக்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, திருமுருகன் ஆகியோரிடம் பணியாற்றிய ஒருவராவார்.

இவர் சென்னை லாயோலா கல்லூரியில் 15-ஆண்டுகளாக மீடியா பாடப் பிரிவில் பேரரசிரியராகப் பணியாற்றியுள்ளதோடு மட்டுமல்லாமல் தற்போது சென்னை திரைப்பட பயிற்சி மையத்தின் இயக்குநராகவும் இருக்கின்றார்.

இந்நிலையில் இவர் 'அற்றைத் திங்கள் அந்நிலவில்' படம் பற்றி கூறும் போது, "ஐ.டி நிறுவனத்தில் புதிதாக இணையும் ஹீரோயினுக்கு அங்கு மேனேஜிங் டைரக்டராக இருக்கும் ஹீரோ மேல் காதல் ஏற்படுகின்றது. அந்த காதல் அதிகமாகும் போது ஹீரோவுக்கு ஏற்கெனவே ஹீரோயினின் அக்காவுடன் திருமணமான விடயம் தெரிய வருகின்றது. எனினும் இவர்கள் இருவரும் விவாகரத்திற்கு காத்திருக்கின்றார்கள் என்பதையும் அறிந்து கொள்ளுகின்றார்.

அக்காவின் கணவர் என்று தெரிந்தும் அவர் தொடர்ந்தும் ஹீரோவைக் காதலிக்க, அந்தக் காதலை ஹீரோ ஏற்றுக் கொண்டாரா? சமூகம் அந்த விஷயத்தை எப்படிப் பார்க்கின்றது? இவற்றை எல்லாம் கடந்து ஹீரோயினின் காதல் என்ன ஆனது?" என்பது பற்றிய ஒரு கதை தான் இந்தப் படம் எனது தெரிவித்திருக்கின்றார் எஸ்.எஸ்.ஜெயக்குமார் லாரன்.

"அது மட்டுமல்லாது படிக்கும் மாணவர்களைக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. என்னையும் மற்றும் நடிக்கும் ஒரு சிலரையும் தவிர மற்ற அனைவருமே மாணவர்கள் தான், அவர்களுக்கு செய்முறை பயிற்சி அளிக்கும் நோக்கத்தில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement