• Apr 26 2024

3 கதாநாயகிகள் வேண்டும் என அடம்பிடித்த கதாநாயகன்.... என்ன கொடுமைடா... அவரே கூறிய விளக்கம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'சூதுகவ்வும்' படத்தின் மூலம் அறிமுகமாகமானவர் நடிகர் அசோக் செல்வன். அதனைத் தொடர்ந்து வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு 'ஓ மை கடவுளே' ஒரு திருப்புமுனை படமாக அமைந்து. 


இவர் தற்போது 'நித்தம் ஒரு வானம்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் ரிது வர்மா, அனுபமா பாலமுரளி, ஷிவாத்மிகா ஆகிய 3 நாயகிகள் உள்ளனர். அத்தோடு இப்படத்தை ரா. கார்த்திக் என்பவர் இயக்கியுள்ளார். 


இப்படம் குறித்து சமீபகாலாமாக பரவி வரும் செய்தி என்னவென்றால் அசோக் செல்வன் தான் அப்படத்தில் 3கதாநாயகிகளை கேட்டிருந்தார் என்பது தான்.

இது தொடர்பாக அசோக் செல்வன் அளித்துள்ள பேட்டியில், ''நான் காதல் கதையம்சம் உள்ள படங்களில் நிறைய நடித்து விட்டேன். எனவே காதல் படங்களில் நடிப்பதை நிறுத்திவிடலாம் என்று முடிவு செய்தேன். 


இந்த நிலையில் 'நித்தம் ஒரு வானம்' கதையை சொன்னதும் எனக்குப் பிடித்துப்போனதால் ஒப்புக்கொண்டேன். இதில் 3 கதைகள் மற்றும் எனக்கு வித்தியாசமான 3 தோற்றங்கள் உள்ளன. இந்த படம் பார்ப்பவர்களை சந்தோஷப்படுத்தும் என நம்புகிறேன். 


மேலும் எனக்கு கொங்கு மண்டல மக்கள் பேசும் மொழி சாயலில் பேசி நடிக்க ஆர்வம் இருந்தது. அது இந்த படத்தின் வாயிலாக நிறைவேறி உள்ளது.

எனது படங்களில் 2 அல்லது 3 கதாநாயகிகள் இருந்தால்தான் நடிப்பேன் என்று இயக்குநரை நான் நிர்ப்பந்திப்பதாக வெளியாகும் தகவலில் உண்மை எதுவும் இல்லை. அது தானாக அமைந்துவிடுகிறது" எனக் கூறியிருக்கின்றார். 

அதுமட்டுமல்லாது "ஓ மை கடவுளே படத்தின் 2-ம் பாகத்தை வாய்ப்பு அமையும்போது எடுப்போம்" எனவும் கூறி இருக்கின்றார் அசோக் செல்வன். 

Advertisement

Advertisement

Advertisement