• Sep 20 2024

“O2” திரைப்படத்தின் ’சுவாசமே’என்ற முதல் சிங்கிள் பாடலின் லிரிக் வீடியோவை ரிலீஸ் செய்த படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. இவரது நடிப்பில் இறுதியாக காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தினைத் தொடர்ந்து O2 என்னும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் சோலோ ஹீரேதயினாக இவர் நடித்து வரும் இந்த திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு டைட்டில் வீடியோவும் வெளியாகியுள்ளது.

டிரீம் வாரியர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் வெங்கட்பிரபுவின் உதவியாளர் ஜி எஸ் விக்னேஷ் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் கதையை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. படத்தின் கதைப்படி ”விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் மாட்டிக்கொள்கிறாள்.

நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் சகபயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான் “O2”. தமிழ்நாடு , கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.” என சொல்லப்பட்டது.

இதையடுத்து இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான ’சுவாசமே’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கண்டு களித்த வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

https://www.youtube.com/embed/zLrMOjBkRZU

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement