• Sep 19 2024

இயக்குநர் சேரன் மதுரையில் கட்டிய வீட்டைப் பார்த்திருக்கின்றீர்களா?- அங்கு யார் வசிக்கிறாங்க தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புரியாத புதிர் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சேரன். இவர் இதனைத் தொடர்ந்து சேரன் பாண்டியன், சூரியன் சந்திரன் படங்களில் நடித்தார். பாரதி கண்ணம்மா என்ற படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து சேரன் சில திரைப்படங்களை இயக்கியிருந்தாலும் அவை அனைத்தும் ரசிகர்களிடையெ வெற்றியைப் பெறவில்லை. இதனால் விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானார்.

பிக்பாஸை விட்டு வெளியேறிய இவர் மீண்டும் படங்களை இயக்க ஆரம்பித்தார். அந்த வகையில் இவரது இயக்கத்தில் கடைசியாக ஆனந்தம் விளையாடும் வீடு என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது. இப்படத்தில் கொளதம் கார்த்தி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இப்படத்தில் சேரனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சேரன் மதுரையைச் சேர்ந்தவர். அவர் தனது சொந்த ஊரில் ஒரு பெரிய வீடு கட்டி வைத்துள்ளார். அந்த வீட்டில் அவரது தாயார் வசித்து வருகிறார். தற்போது சேரன் மதுரையில் கட்டி வைத்துள்ள பெரிய வீட்டில் புகைப்படம் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

https://www.youtube.com/embed/zLrMOjBkRZU

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement